சைவம்

திராவிடர்களின் சமயம் –

மொகெஞ்சதாரோ – ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.

வேதத்தையும் சாதியையும் மறுத்த சைவம் –

காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.

காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது.

தியானக் கடவுள் –

சிந்து சமவெளி நாகரீகத்தில் பசுபதி என்ற சிவ வழிபாடே நிகழ்ந்து வந்திருக்கிறது. தியானத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் பசுபதியையும் தியான நிலையிலேயே வழிபட்டனர். தன்னை உணர்ந்தவனே தலைவன். தன்நிலை உணர தியானம் அவசியம் என உணர்த்துவதே பசுபதி நாதரின் தத்துவம்.

உயர் நெறி –

பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் கொல்லாமையை கடைபிடித்த சமயம் சைவம் மட்டுமே. அதனுடைய அன்பின் நெறி உணர்ந்து கொல்லாமைக்கே சைவம் எனப் பெயரிட்டனர் பெரியோர். சைவர்கள் பின்பற்றிய கொல்லாமை நெறி சைவம் என இன்றும் வழங்கப்படுகிறது.

அன்னதானம் –

உலகத்தில் எல்லா உயிர்களாலும் தவிர்க்க இயலாதது பசி. அந்தப் பசியை அடக்கியாலவும், அமைதிபடுத்தவும் எவராலும் இயலாது. எனவே எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் சிவனின் பெயரைச் சொல்லி பல சிவனடியார்கள் அன்னதானம் செய்கின்றார்கள்.

இதனுள் அடக்கம் –

ஒரே கடவுள் என்ற கொள்கையில் இஸ்லாமும், அன்பே கடவுள் என்ற கொள்கையில் கிறித்துவமும், கடவுள் உனக்குள்ளே இருக்கின்றார் என்ற பௌத்தமும், இன்னும் உலகில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற சமயங்களும் சைவத்தின் தத்துவங்களில் அடங்கிப்போகின்றன.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: